SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் வெப்பத்தால் மக்கள் அவதி தமிழகத்தில் 2 நாள் அனல் காற்று வீசும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2017-05-20@ 00:08:58

சென்னை : வடமேற்கு திசையில் இருந்து வெப்ப காற்று வீசுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும். இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி  வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருத்தணியில் தொடர்ந்து 110 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 115 டிகிரி வரை தொட்டுவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 113 டிகிரி வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்றும் 113 டிகிரி வெயில் நிலவியது. சென்னையில் நேற்று 108 டிகிரி வெயில் நிலவியது. காரைக்கால், நாகப்பட்டினம் 104 டிகிரி, பாளையங்கோட்டை, கரூர், பரங்கிப்பேட்டை,மதுரை 102 டிகிரி வெயில் நிலவியது. சென்னையில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வெயில் அதிகரித்துள்ளது.

தற்போது வட மேற்கு திசையை நோக்கி வெப்ப காற்று வீசி வருவதால் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான அனல் காற்றுவீசி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களிலும் அனல் காற்று வீசும். கடலோரப் பகுதியில் வெப்ப காற்று வீசுவதால் உள் மாவட்டங்களிலும் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும் என்பதால் உள் மாவட்டங்களிலும் அனல் காற்று வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நேற்று தக்கலை, போச்சம்பள்ளி ஆகிய இடங்களில் 60 மிமீ மழை பெய்துள்ளது. தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஈரோடு, குடியாத்தம், அருப்புக் கோட்டை, குழித்துறை, விருதுநகர், புள்ளம்பாடி, குமாரபாளையம், தளி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, உதகமண்டலம், திருவையாறு, திருப்பத்தூர், விராலிமலை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி, பெருந்துறை, திருச்சி, பவானி 30மிமீ, சத்தியமங்கலம், கோவை, மேட்டூர், ஆரணி, தர்மபுரி 20 மிமீ மழை பெய்துள்ளது.
இதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் இன்றும் இடியுடன் மழை பெய்யும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன