SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சினிமா டிக்கெட், போன் உட்பட சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி அறிவிப்பு

2017-05-20@ 00:01:58

* கல்வி, சுகாதாரத்துக்கு விலக்கு
* தங்கத்துக்கு நிர்ணயிப்பதில் இழுபறி

புதுடெல்லி : சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஓட்டல், சினிமா, தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும். கல்வி, சுகாதாரத்துக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மீதான வரி விதிப்பு முடிவு செய்யப்படவில்லை. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்காக வரி விதிப்பு இருக்கும். இதில் எந்த சதவீதத்துக்குள் எந்த பொருள் அல்லது சேவையை கொண்டுவருவது என, இதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி வந்தது. மாநில பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த ஆலோசனைகள் நடந்தன. மேலும் தொழில்துறைகள் சார்பில் தங்கள் துறைக்கு வரியை குறைக்க வேண்டும் அல்லது வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் 2 நாள் கூட்டம் நகரில் நடந்தது. இதில் 1,211 பொருட்களுக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. டூத்பேஸ்ட், ஹேர் ஆயில், சோப்பு போன்றவற்றுக்கு குறைந்தபட்ச வரி விதிக்கப்பட்டது. பால், உணவு தானியங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. தங்கத்தின் மீதான வரி விதிப்பு மற்றும் சேவை இனங்கள் மீதான வரி நேற்று முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் தொலைத்தொடர்பு, விமான பயணம், காப்பீடு, ஓட்டல், ரெஸ்டாரன்ட் சேவை வரிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி, வரிகள் இறுதி செய்யப்பட்டன. இதில் விதிக்கப்பட்ட வரிகள் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:

சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, நிதி சேவைகளுக்கு 18 சதவீதம் விதிக்கப்படும். போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஓலா, உபர் போன்ற டாக்சி சேவைகளுக்கு தற்போது 6 சதவீத வரி உள்ளது. இது 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஏசி அல்லாத ரயில் டிக்கெட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏசி டிக்கெட்கள் மீது 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும். மெட்ரோ, மின்சார ரயில் போன்ற உள்ளூர் ரயில் சேவைகள், ஹஜ் யாத்திரை போன்ற ஆன்மீக புனித பயணங்கள் ஆகியவற்றுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் அல்லது அதற்கு கீழ் ஆண்டு வர்த்தகம் மேற்கொள்ளும் ரெஸ்டாரன்ட்களுக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும். ஏசி அல்லாத ரெஸ்டாரன்ட்களுக்கு 12 சதவீத வரி விதிப்பு உண்டு. ஆனால், மதுபான லைசென்ஸ் பெற்றுள்ள ஏசி ரெஸ்டாரன்ட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு அதிகபட்ச வரியான 28 சதவீதம் வசூலிக்கப்படும். ரூ.000 முதல் ரூ.2,500 வரை அறை வாடகை கட்டணம் இருந்தால் 12 சதவீத வரி விதிக்கப்படும். தொலைத்தொடர்பு நிதி
சேவைகளுக்கு 18 சதவீத வரியும், சூதாட்டம், குதிரை பந்தயம், சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படும். ஜிஎஸ்டி வரியால் பொருட்களுக்கு தற்போது உள்ள விலை உயர வாய்ப்பில்லை. தங்கத்தின் மீதான வரிவிதிப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ம் தேதி நடக்கிறது. அதில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா கூறுகையில், ‘‘எகனாமிக் வகுப்பு விமான பயணத்துக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுக்கு 12 சதவீத வரி வசூலிக்கப்படும்.  ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கும் தொகையில் 1 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்’’ என்றார். ஓட்டல் அறை வாடகை ரூ.5,000க்கு மேல் இருந்தால் அவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.1,000க்கு கீழ் உள்ள வாடகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2,500 முதல் ரூ.5,000க்கு கீழ் அறை வாடகை கொண்ட ரெஸ்டாரன்ட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, மிக சாதாரண விடுதி அறை கட்டணங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
தற்போது தொலைத்தொடர்பு துறையில் சேவை வரி 15 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் 18 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளதால் கட்டணங்கள் உயரும்.

இதுபோல் சினிமா டிக்கெட்களுக்கு உச்சபட்ட வரியான 28 சதவீதம் விதிக்கப்படுவதால் அவற்றின் விலை உயரும். ஆனால், சில மாநிலங்களில் இவற்றுக்கு விதிக்கப்படும் வரியை விட தற்போது அதிகமாக உள்ளது. சில மாநிலங்களில் 40 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. எனவே அந்த மாநிலங்களில் சினிமா டிக்கெட் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள் எவ்வளவு வரி விதிக்கின்றன என்பதை பொறுத்து கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கும்.

சரக்கு, சேவைக்கான ஜிஎஸ்டி வரிகள் ஜூலை முதல் அமல்.

* 1,211 பொருட்களுக்கு நேற்று முன்தினம் வரி நிர்ணயம்.

* பால், உணவு தானியங்களுக்கு வரி  விலக்கு.

* டூத்பேஸ்ட், ஹேர் ஆயில், சோப்புக்கு  குறைந்த வரி.

* தங்கத்தின் மீதான வரி விதிப்பு முடிவாகவில்லை.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்