SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

IPL T20 சீசன் 10 தகுதிச்சுற்று 2 : கொல்கத்தாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதியில் நுழைந்தது மும்பை

2017-05-19@ 22:49:38

பெங்களூரு: ஐ.பி.எல் டி20 சீசன் 10 தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் இறுதி போட்டிக்குள் நுழைந்தது. முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை எடுத்து கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐ.பி.எல் டி20 சீசன் 10 தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனை தொடா்ந்து நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில், முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதி சுற்றில் நுழைந்து அசத்திய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்