SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்தனை முறை அகற்றினாலும் மீண்டும் முளைக்கும் நடைபாதை கடைகள்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடியால் மக்கள் அவதி

2017-05-19@ 21:42:41

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சேலம் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தின் மையப் பகுதியாக, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் விளங்குகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநில பஸ்களும், புது பஸ் ஸ்டாண்டிற்கு தான் வந்து செல்கின்றன. மாவட்டத்தின் முக்கிய வணிக பகுதியாகவும் புது பஸ் ஸ்டாண்ட் விளங்குகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகளுக்கான எந்தவித வசதிகளும் இங்கு செய்து தரப்படவில்லை. பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் முன்னரே அடிக்கும் துர்நாற்றம், பஸ்சில் தூங்கி கொண்டிருப்பவர்களையும் எழுப்பி விடும். பஸ் ஸ்டாண்டின் அனைத்து ஓரங்களிலும் கழிப்பறை இருந்தாலும், வெளிப்புறங்களிலேயே சிறுநீர் கழிக்கப்படுகிறது. இதனால் பெண் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

இதுஒருபுறம் இருக்க, பல ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்டிற்குள் நிலவும் இடநெருக்கடி இன்னமும் தீர்ந்தபாடில்லை. குறிப்பாக பயணிகள் அமரவும், நடந்து செல்லவும் போதிய இடவசதி இல்லை. இதனால், அவசர நேரங்களில் ஓடிச் சென்று பஸ்சை பிடிக்க முடியாத நிலை கூட காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்டின் நடுவே பயணிகளுக்கான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை முழுவதும் தற்காலிக கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி சந்தை போல, பஸ் ஸ்டாணட் செயல்படுகிறது. நடைபாதையில், பூக்கடை, பழக்கடைகள், ரெடிமேடு ஆடைகள், செருப்பு கடைகள், வேர்கடலை கடைகள், சோப்பு ,சீப்பு, கண்ணாடி கடைகள் என எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் சந்தை போன்று காட்சி அளிக்கிறது. இதனால், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வருவோர்  பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வெளியூர் பஸ்களை நிறுத்தும் செட்டுகளையும், இந்த கடைகள் முழு அளவில் ஆக்கிரமித்து விட்டன. இதுகுறித்து பலமுறை பயணிகள் தரப்பில் இருந்து மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகளும் பெயரளவில் அவ்வப்போது கடைகளை அகற்றிவருகின்றனர். ஆனால், அகற்றப்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த கடைகள் அங்கு மீண்டும் முளைத்து விடுகின்றன. இதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என கூறப்படுகிறது. மேலும், பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள பகுதி, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்குள் வருகிறது. ஒரு கடைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மாமூல் செல்வதால், போலீசாரும் இதனை கண்டுகொள்வதில்லை என புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பயணிகளுக்கான எந்தவித வசதிகளும் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இல்லை. ஒரு ஊரின் பஸ் ஸ்டாண்ட்டை வைத்து தான், அவற்றின் மதிப்பு உயரும். ஆனால் புது பஸ் ஸ்டாண்டின் நிலைமை தலைகீழாக உள்ளது. இந்தியாவில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் சேலம் 135வது இடத்தை பெற்றுள்ளதே, இதற்கு சான்றாக கூறலாம். பெயரளவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டாலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் துணையுடன் கடைகள் மீண்டும் முளைப்பது வாடிக்கையாகி விட்டது.

மேயர் பதவியில் இருந்தபோது, அரசியல் காரணங்களால்  அவற்றை அகற்ற முடியவில்லை என அதிகாரிகள் கைவிரித்தனர். தற்போது, அதிகாரங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள போது, கடைகளை அகற்ற தயங்குவது ஏன் என தெரியவில்லை. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் தான் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பொலிவு பெறும்”, என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Christiansmanila

  மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

 • 22-01-2018

  22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்