SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்: நிகர்நிலை பல்கலைகளுக்கு யுஜிசி உத்தரவு

2017-05-19@ 19:46:35

புதுச்சேரி: புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தையே வசூலிக்க வேண்டுமென பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீடாக பெற்ற இடங்களுக்கு கடந்த 2, 4, 11 ஆகிய தேதிகளில் சென்டாக் கலந்தாய்வு நடந்தது. கல்வி கட்டணம் அறிவிக்காமல் கலந்தாய்வு நடைபெற்றதால் ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து 3 சுயநிதி மருத்துவ கல்லூரி, ஒரு சுயநிதி பல் மருத்துவ கல்லூரிக்கான கட்டணத்தை உயர்கல்வி கட்டண நிர்ணயக் குழு அறிவித்தது. அதன் அடிப்படையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்த மாணவர்கள் சென்றனர்.

அவர்களிடம் இருந்து அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வாங்க தனியார் கல்லூரி நிர்வாகம் மறுத்தது. மேலும், அதிக கட்டணம் செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் சேர முடியும் என்று கூறி திருப்பி அனுப்பியது. அந்த மாணவர்கள் கடந்த 16ம்தேதி ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் கிரண்பேடியை சந்தித்து தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மனு அளித்தனர். மேலும், மருத்துவ பட்டமேற்படிப்பு கட்டணம் தொடர்பாக புதுச்சேரி அரசு கடந்த 14ம் தேதி அளித்த கட்டண நிர்ணய உத்தரவில் வெறும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் புதுவையில் இயங்கும் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் குறிப்பிடப்படவில்லை. 3 தனியார் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் தொகை வசூலிக்கின்றனர்.

இதனால் இடங்களுக்கு தேர்வு பெற்று கல்லூரிகளில் சேர தயக்கமாக உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து கவர்னர் கிரண்பேடி உடனே பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) செயலாளர் ஜஸ்பால் சிங் சாந்துவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி இணைச் செயலாளர் சுனிதா ஸ்வாச் அனுப்பியுள்ள உத்தரவில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை மீறி செயல்படும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

  • PeruBUsCrash44dead

    பெரு நாட்டில் 300 அடி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி

  • Amritsarpm

    அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் குடும்பத்துடன் வழிபாடு

  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X