SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண் மாறாமல் வேறு மொபைல் நிறுவன சேவையை தொடர.....

2017-05-19@ 10:31:50

மொபைல் நம்பர் போர்டபிளிட்டி என்பதன் சுருக்கம்தான் எம்என்பி. இது டிராய் நிறுவனத்தால் வகுக்கப்பட்ட நுகர்வோருக்கு ஆதரவான பல தீர்மானங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இதன்படி மொபைல் சேவை வழங்குவோரின் சேவையில் திருப்தி இல்லையென்றால் அதே எண்ணை வைத்துக்கொண்டு வேறு மொபைல் நிறுவனத்திற்கு மாறும் முறையே எம்என்பி ஆகும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?:

முதலில் நீங்கள் எந்த சேவை வழங்குவோரை அணுக விரும்புகிறீர்களோ அவர்களிடம் இருந்து கஸ்டமர் அக்விசிஷன்படிவம் (சிஏஎப்) மற்றும் போர்டிங் படிவத்தைப் பெற வேண்டும். அதில் உள்ள விதிமுறைகளைப் பார்த்து அதை நிரப்ப வேண்டும். போர்டிங் படிவத்தை நிரப்ப உங்களுக்கு யுனிக் போர்டிங் கோட்(யுபிசி) தேவை. இதற்கு உங்கள் மொபைலில் இருந்து 1900 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ்.மூலம் போர்ட் என்று டைப் செய்து ஒரு சின்ன இடைவெளி விட்டு உங்கள் மொபைல் நம்பரை டைப் செய்து அனுப்ப வேண்டும். உடனே உங்களுக்கு யுபிசி கிடைத்து விடும்.

இப்போது நிரப்பப்பட்ட படிவம் மற்றும் சிஏஎப் படிவம் மற்றும் தேவையான சாட்சி ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். புதிய சிம்கார்டை புதிய சேவை வழங்குவோரிடம் இருந்து பெற வேண்டும். நீங்கள் போர்டிங்கிற்காக ரூ.19வரை கட்டணமாக செலுத்த வேண்டி வரும். விண்ணப்பித்த 7ம் வேலைநாளிற்குள்ளாக போர்டிங் நிகழும். உங்கள் புதிய சேவை வழங்குவோர் உங்களுக்கு போர்டிங் நிகழும் தேதியையும் நேரத்தையும் தெரியப்படுத்துவார். அப்போது இரவு நேரத்தில் 2 மணி நேரம் வரை சேவை துண்டிக்கப்படும். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பழைய சிம்மை அகற்றிவிட்டு புதிய சிம்மை பயன்படுத்த வேண்டும்.

தகுதிகள், விதிமுறைகள்:

ஒரு சேவை வழங்குவோரிடம் இருந்து மற்றொன்றிற்கு மாற குறைந்தபட்சம் 90 நாட்கள் முதல் சேவை வழங்குவோரிடம் இணைப்பு வைத்திருக்க வேண்டும். ஒரே சேவைப் பகுதியில்தான் நீங்கள் மாற இயலும். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் பில்தொகையை முழுவதுமாக செலுத்திவிட்டீர்களா என்று உறுதி செய்ய வேண்டும். ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் போர்டிங்கின் போது டாக்டைம் தொகை மீதம் இருந்தால் அதை இழந்து விடுவீர்கள்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • WisconsinRefinery

  விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

 • brazil_proteesst

  தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

 • president_koreanss11

  கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

 • 27-04-2018

  27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • teacher_strike123

  சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்