SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலை அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வம் - பி.காம், பிபிஏ, ஆங்கில இலக்கியத்திற்கு மவுசு

2017-05-18@ 11:00:35

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்கள் என்ற நிலையும், எண்ணமும் ஒருகால கட்டத்தில் மக்கள் மனதில் இருந்து வந்தது. அந்த மனநிலை தற்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மாறி வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதே இதற்கு சிறந்த உதாரணமாகும். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியாகி உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவிகள் தங்களது மேற்படிப்பு குறித்து கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வுகள் கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு மாணவர்களும் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அதேபோல, பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே விண்ணப்ப விநியோகத்தை தொடங்கியுள்ளது. சட்ட படிப்பு வழங்கும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகமும் தனது பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் கலை அறிவியல் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கடந்த 12ம் தேதி முதல் வழங்க தொடங்கியுள்ளன. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான நீட் ேதர்வு கட்டாயம் மற்றும் வேலை வாய்ப்பு குறைவு காரணமாக பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் மோகம் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கவனம் தற்போது கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்பியுள்ளது. இதனால் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் சூடு பிடித்துள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: கலை அறிலியல் படிப்புகளை மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும் போது சேர்க்கை மிக எளிது, கல்வி கட்டணம் குறைவு, மூன்றாண்டுகளில் இளநிலை படிப்பை முடித்து விடலாம். படிக்கும் போதே பகுதி நேர வேலைவாய்ப்பு, மாற்று திறன்களை வளர்த்து கொள்ள போதிய நேரம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் அதிகளவில் பங்கேற்கலாம். உடனடி வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் தற்போது மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தவர்களுக்கு அந்தந்த துறைகளில் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளில் குறைந்த செலவில் படித்து முடித்ததும் மாணவர்களுக்கு பல்வேறு துறையில் வேலை வாய்ப்பு உள்ளதால் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் விரும்பும் பாடங்கள்

கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை ஆங்கில இலக்கியம், பிகாம், கணிதம், வணிகவியல், பிபிஏ, பிசிஏ, புவியியல், உணவு அறிவியல், ஓட்டல் மேலாண்மை, பேஷன் டிசைனிங், சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sushmafrancepm

  பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

 • coolingtowersflorida

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

 • taiwaneseminimodels

  தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

 • tentsforchildrenstexas

  அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

 • PresidentGreeceleaders

  அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்