SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துல்லிய நிறமறியும் சூப்பர் கண்ணாடி!

2017-05-17@ 10:41:36

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒரே நிறத்தில் சின்ன வித்தியாசங்களோடு சர்ட் எடுத்தாலும் வித்தியாசம் தெரியாமல் அணிந்து கோமாளியாகும் சோகம் இனியில்லை. விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்காகவே டெராகுரோமேட் (கண்களிலுள்ள நிறமறியும் 4 செல்கள்) கண்ணாடியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த சூப்பர் ஹைடெக் கண்ணாடி மூலம் கள்ளநோட்டு உள்ளிட்ட குற்றங்களையும் கண்டுபிடிக்கலாம். நீலம், பச்சை, சிவப்பு ஆகிய முதன்மை நிறங்களிலிருந்து மனிதனின் கண்கள் பிற நிறங்களை பிரித்தறிகிறது. கண்களின் திறனைத் தாண்டி இக்கண்ணாடி குறிப்பிட்ட நிறங்களின் வேறுபாட்டையும் கண்டறிகிறது.

இயற்பியலாளரான மிகைல் கேட்ஸ் குழுவினர்,நீலநிறத்தை துல்லியமாக காட்டும் இரு ஃபில்டர்களை கண்டறிந்துள்ளனர். “முதலில் பார்க்கும்போது ஒரே நிறம் போல தெரிந்தாலும் கண்ணாடி அணிந்து பார்த்தால் உண்மையில் அவை இருவேறு நிறங்கள்” என ஆச்சரியமாகப் பேசுகிறார் கேட்ஸ். நீலநிறத்தினைக் கடந்து பச்சை நிறத்திற்கான ஃபில்டர்களையும் கண்டுபிடிக்க இருக்கின்றது கேட்ஸ் குழு. “இந்த சூப்பர் கண்ணாடியை அணிந்து காட்டிற்குள் செல்ல ஆசை” என குழந்தையாய் சிரிக்கிறார் கேட்ஸ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்