SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதி தாவூத் இப்ராகிம் இருப்பது பாகிஸ்தானில்தான

2012-11-07@ 02:07:41

ரோம் : மும்பையில் 1993ம் ஆண்டில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பாதுகாப்பாக பதுங்கியுள்ளார். போதுமான ஆதாரங்கள் உள்ளபோதிலும் அந்நாட்டு அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறினார்.
ரோம் நகரில் இன்டர்போல் சார்பில் பொது விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கலந்து கொண் டார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக, எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளால் அதிக அச்சுறுத்தல் உள்ளது. மும்பையில் 1993ம் ஆண்டில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 257 பேர் கொல்லப்பட்டனர், 713 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரத்தை நிகழ்த்திய பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டிருக்கிறார். அச்சம்பவம் குறித்து போதுமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பாகிஸ்தான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், தாவூத் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இந்திய பிரஜைகளான அந்த தீவிரவாதிகள் குறித்து இன்டர்போல் நோட்டீஸ் கூட வழங்கப்பட்டுள்ளது. அதே போல், மும்பையில் 26/11ல் சுலபமாக நுழைந்த தீவிரவாதிகள் குறைந்த அளவு ஆயுதங்களை வைத்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தினர். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கையை பாதிக்கச் செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இதுபோன்ற பயமுறுத்தல்களை தடுக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். தீவிரவாதம் எந்த வகையிலும் நிகழாமல் தடுக்க இந்தியா உறுதி கொண்டுள்ளது என்றார்.

drug coupon card prescription drugs coupons drug discount coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

 • largebudhastatue

  உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்