2 வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் அபூர்வமான அட்லஸ் அந்துப்பூச்சி ஏற்காட்டில் கண்டுபிடிப்பு
2017-05-10@ 00:03:07

சேலம் : 2வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்ட அபூர்வமான அட்லஸ் அந்துப்பூச்சிகள் ஏற்காட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்துப்பூச்சிகள் என்பவை வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றம் உடையவை. ஆனால் இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. அந்துப்பூச்சிகளை விட்டில் பூச்சி என்றும் பட்டாம் பூச்சி என்றும் அழைக்கின்றனர். இப்பூச்சி வகைகளில் உலகளவில் சுமார் 1,60,000 இனங்கள் உள்ளன. பெரும்பாலான அந்துப்பூச்சிகள் இரவில் மட்டுமே உலாவுகின்றன. இந்த நிலையில், அட்லஸ் அந்துபூச்சி என்ற அபூர்வ வகை அந்துப்பூச்சிகள் சேலம் ஏற்காட்டில் இருப்பது அறிவியல் ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் கண்டு அறியப்பட்டுள்ளது. இது குறித்து அறிவியல் ஆர்வலர் இளங்கோ கூறியது:
அந்துப்பூச்சிகளில் மிகப்பெரியது அட்லஸ் அந்துப்பூச்சி. இது இந்தியாவின் இமயமலைப்பகுதி, சீனா, மலாய், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் வசிக்கின்றன. இது சிறகை விரித்து நிற்கும்போது, அதை பார்ப்பதற்கு அட்லஸ் அதாவது உலக வரைபடம் போன்று இருக்கும் என்பதால் அட்லஸ் மாத் எனப் பெயரிட்டுள்ளனர். சிறகின் நுனிப் பகுதியானது விஷப்பாம்பின் தலை போன்று உள்ளது. ஆகவே இதனை பாம்புத்தலை அந்துப்பூச்சி என சீன மக்கள் அழைக்கின்றனர். அட்லஸ் அந்துப்பூச்சியானது ஏற்காட்டில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையங்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை
செய்யாறு அருகே பரபரப்பு பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்றிய பூனை
பொன்னமராவதியில் வறட்சியால் பயிர்கள் கருகின : விவசாயிகள் கண்ணீர்
இரட்டை ரயில்பாதை பணிக்காக நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் 60 வீடுகள் இடிப்பு : பெண்கள், குழந்தைகள் கதறல்
வரகனூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி
வாசுதேவநல்லூர் அருகே கண்ணீர் வடிக்கும் மாதா சிலை : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு