SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக அரசு சார்பில் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள், தமிழ் செம்மல் விருதுகள் அறிவிப்பு

2017-04-25@ 00:52:28

சென்னை : தமிழக அரசு சார்பில் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் மற்றும் தமிழ் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் பெயர்களாலும் தன்னலமற்ற தலைவர்கள் பெயர்களாலும் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு அந்தந்த விருதுகளுக்கான சான்றோர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2016ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள், 2015ம் ஆண்டிற்கானத் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளர்கள் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2016-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்திற்கும், கபிலர் விருது - இல.க.அக்னிபுத்திரன்,  உ.வே.சா விருது - ம.அ. வேங்கடகிருஷ்ணன், கம்பர் விருது -  இலங்கை ஜெயராஜ், சொல்லின் செல்வர் விருது - பி.மணிகண்டன், ஜி.யு.போப் விருது - வைதேகி ஹெர்பர்ட்ம், உமறுப்புலவர் விருது - பேராசிரியர் தி.மு.அப்துல் காதர், இளங்கோவடிகள் விருது - நா.நஞ்சுண்டன், அம்மா இலக்கிய விருது - ஹம்சா தனகோபால்,  மொழிபெயர்ப்பாளர் விருது -  நாகலட்சுமி சண்முகம், அ.ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, கா.செல்லப்பன், வி.சைதன்யா, சி.முருகேசன், கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம்பிள்ளை, கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோருக்கும், 2015ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினி தமிழ் விருது - செ.முரளி (எ) செல்வ முரளிக்கும் வழங்கப்படுகிறது.

விருது பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசு தொகையாக ரூ.1 லட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.  மற்றும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 2015ஆம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை-வேம்பத்தூர் (எம்) கிருட்டினன், திருவள்ளுர்-மா.கி.ரமணன், காஞ்சிபுரம்-கூ.மு.துரை (எ) கவிஞர் கூரம் துரை, வேலூர்-வி.பத்மநாபன் (எ) புலவர் வே.பதுமனார், கிருஷ்ணகிரி-ந.நாகராசன், திருவண்ணாமலை-பா.இந்திரராசன், விழுப்புரம்-பெ. ஆராவமுதன், கடலூர்-அரங்க. பாரி, பெரம்பலூர்-செ.சுந்தரம் (எ) வெண்பாவூர் செ. சுந்தரம், அரியலூர்-ம.சோ.விக்டர், சேலம்-பி.வேலுசாமி, தர்மபுரி-தகடூர். வனப்பிரியனார் என்கிற கா.ராமசந்திரன், நாமக்கல்-மா.சின்னு, ஈரோடு- ச.சந்திரகுமாரி, கரூர்-ச.வரதசிகாமணி,

கோயம்புத்தூர்-கவிதாசன், திருப்பூர்-ஆ.முருகநாதன், நீலகிரி-மணி அர்ச்சுனன், திருச்சி-தி.வெ.இராசேந்திரன், புதுக்கோட்டை-ஞானாலயா பா.கிருட்டினமூர்த்தி, சிவகங்கை-தி.அனந்தராமன், தஞ்சாவூர்-தங்கராசு, திருவாரூர்-வீ.ராமமூர்த்தி, நாகப்பட்டினம்-செ.செய்யது முகம்மது கலிபா சாகிப், ராமநாதபுரம்-ஜெகாதா, மதுரை-ந.மணிமொழியன், திண்டுக்கல்-மா.பெரியசாமி (எ) தமிழ் பெரியசாமி, தேனி-ப.பாண்டியராசன், விருதுநகர்- கா.இராமச்சந்திரன், திருநெல்வேலி - முனைவர் கேப்டன் பா.வேலம்மாள், தூத்துக்குடி -கா.அல்லிக்கண்ணன், கன்னியாகுமரி-சிவ.பத்மநாபன்
தமிழ்ச்செம்மல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம், பாராட்டுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.  
விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்