SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நாளை மெட்ரோ ரயில் சேவை காலை 4 மணிக்கு துவங்குகிறது

2017-04-22@ 00:04:11

புதுடெல்லி: மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நாளை மட்டும், காலை 4 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை இயக்கபட உள்ளது.தலைநகர் டெல்லிக்கு உட்பட்ட தெற்கு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் நாளை (23-4-2017) தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 272 வார்டுகளிலும் யார் வெற்றி பெற்று, மாநகராட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார் என்ற பரபரப்புடன் வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளனர். தேர்தலுக்கென ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியும், ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு சிலர் தாவியும் உள்ளனர்.இந்நிலையில் மாநகராட்சி மக்கள் கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வாக்குகளை பதிவு செய்வது, தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைத்து அதன் விதிகளை பின்பற்றுவது உள்ளிட்ட பிரசாரங்களை டெல்லி பிரதேச தேர்தல் ஆணையம் ஏற்கனவே செய்திருந்தது. இதற்கென மக்கள் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்களில் ராட்சத பேனர்களும் வைக்கப்பட்டு, வாக்காளர்கள் மறவாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் நாளை நடைபெற உள்ள தேர்தலில், தேர்தல் பணி ஊழியர்கள் கால தாமதமின்றி வருவதற்கென காலை 4 மணி முதலே மெட்ரோ ரயில் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 4 முதல் 6 மணிவரை 30 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் என மஞ்சள், நீலம், ஊதா, சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட வழிதடங்களில் சேவை இயக்கப்படுகிறது. அதன்பின் வழக்கமான கால அட்டவணை நேரத்தில் இந்த சேவை தொடரும் என டிஎம்ஆர்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் முதன்முறையாக ‘நோட்டா( யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை)’ என்ற பொத்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முதன்முறையாக டெல்லியில் 1.1 லட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

3 மாநகராட்சிகளில் மொத்தம் 1,32,10,206 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 73,15,915 பேர் ஆண் வாக்காளர்கள், 58,93,418 பேர் பெண் வாக்களார்கள், 793 பேர் மூன்றாம் பாலினம் என ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2007,2013 மாநகராட்சி தேர்தலுக்கு பின் இந்த வருடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.                              

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2017

    23-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்