SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவுடி கும்பல் மோதல் இருவர் சுட்டுக்கொலை

2017-04-22@ 00:04:10

புதுடெல்லி: வடக்கிழக்கு டெல்லி ஜாப்ராபாத்தில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இரு ரவுடி கும்பலுக்கிடையே நடந்த மோதலில் உயரிழப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவிக்கின்றனர்.வடகிழக்கு டெல்லி ஜாப்ராபாத் பகுதியில் கல்யான் சினிமா தியேட்டர் உள்ளது. இங்குள்ள சாலையில்  கடந்த 19ம் தேதி இரவு 11 மணியளவில் உடலில் குண்டு துழைத்த நிலையில் இருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். போலீசார் உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இம்ரான்(32) இறந்துவிட்டதாகவும், முகமது கமர்(35) சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நாசீர் மற்றும் சானு பெகல்வான் என்ற இரு ரவுடி கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தது தெரிந்தது. இதில் நாசீர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது இளைய சகோதரனை கொலை செய்வதற்காக இம்ரான் மற்றும் கமர் வந்துள்ளனர். ஆனால் இந்த விஷயம் தெரிந்து நாசீர் கும்பல் இருவரையும் கொலை செய்ய முற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்துவதாக வடக்கிழக்கு டெல்லி துணை கமிஷனர் அஜித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.கொலை நடந்த இடத்தில் காயமடைந்தவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 12 வெத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2017

    23-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்