SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்கலை. மாணவர் மாயமான வழக்கு வக்கீலிடம் மன்னிப்பு கேட்க போலீசுக்கு உத்தரவு: உயர்நீதிமன்றம் அதிரடி

2017-04-22@ 00:04:08

புதுடெல்லி: ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் நஜீப் அகமது மாயமான விவகாரத்தில், வக்கீலின் வழக்காடும் திறமை மீது நம்பிக்கை இழந்த போலீசார் மீது கோபமடைந்த உயர் நீதிமன்றம், அவரிடம் பகிரங்க மன்னிப்பு கோரும்படி உத்தரவிட்டது. உத்தரவுக்கு அடிபணிந்த மூத்த அதிகாரி, வக்கீலிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.  நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் தீபா சர்மா ஆகியோரைக் கொண்ட அமர்வில், 6 மாதங்களாக காணாமல் போயுள்ள ஜேஎன்யூ மாணவர் நஜீப் குறித்த வழக்கு நடந்து வருகிறது. அதில், மூத்த நிலைக்குழு வக்கீல் ராகுல் மெஹ்ரா போலீசாருக்காக வாதாடி வருகிறார்.

  இந்த வழக்கில் நேற்று முன்தினம் விசாரணை தொடர்ந்தது. அப்போது ஆஜரான மெஹ்ரா, ‘‘விசாரணை தகவல்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட அறிக்கையை படித்து பார்க்க போலீஸ் அதிகாரி அனுமதி மறுக்கிறார். அவர்களுக்கு நான் ஒத்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எனக்கு ஒத்து வராது. எனவே போலீஸ் சார்பாக வாதாட விருப்பமின்றி விலகிக் கொள்கிறேன்’’, என்றார்.  மெஹ்ரா விலகுவதற்கு எதிர்தரப்பு நஜிப்பின் தாயார் பாத்திமா நபீஸ் சார்பில் ஆஜராகிய மூத்த வக்கீல் கோலின் கோசால்வ்ஸ் ஆட்சேபணை தெரிவித்ததோடு, போலீசாரின் போக்கு கண்டிக்கத்தக்கது. கடமை தவறிய போலீசார் தங்களது வக்கீலிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றார்.

  அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கருத்து தெரிவித்து கூறுகையில், ‘‘வழக்கு விசாரணையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து மெஹராவுக்கு போலீசார் தகவல் அளிக்க வேண்டும். அவரிடம் போலீசார் எந்த தகவலையும் மறைக்கக்கூடாது. அவர் மீது நம்பிக்கை வைக்காமல், தகவலை மூடி மறைப்பது வருந்தத்தக்க விஷயம். எனவே அவரிடம் மன்னிப்பு கோருங்கள்’’, என டிசிபிக்கு உத்தரவிட்டனர்.  அதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகிய காவல்துறை துணை கமிஷனர் (குற்றப்பிரிவு), ராம்கோபோல் நாயக், வக்கீல் மெஹ்ராவிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bhuvaneshkumar_marriage

    இனிதாக நடந்த புன்னகை பொங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்

  • PrimeMinisters

    பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்