SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எச்1பி விசா உத்தரவை திரும்ப பெற வேண்டும்: அமெரிக்காவிடம் ஜெட்லி கோரிக்கை

2017-04-21@ 17:57:11

வாஷிங்க்டன்: இந்தியர்களை வெகுவாக பாதிக்க கூடிய வகையில் இருப்பதால் எச்1பி விசா தொடர்பான உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்காவிடம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அருண் ஜெட்லி வாஷிங்டனில் வர்த்தக அமைச்சர் வில்பர் ரோசை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கியுள்ள பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

இதே நிலை தொடர வேண்டுமானால் எச்1பி விசா விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என அருண் ஜெட்லி கேட்டுக்கொண்டார். அருண் ஜெட்லிக்கு பதிலளித்த வில்பர் ரோஸ் விசா மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறினார். மேலும் மிகத்திறமையான வெளிநாட்டவரை மட்டுமே அனுமதிக்கும் வகையில் குடியேற்ற விதிகள் மாற்றியமைக்கப்படலாம் என அப்போது  அவர் குறிப்பிட்டார். ஜெட்லியின் இந்த முயற்சியை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி அது பலனளிக்குமா என்று சந்தேகம் எழுப்பியுள்ளது.

எச்1பி விசா நடைமுறையை திருத்தும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது நடைமுறைக்கு வந்தால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப மாணவர்களுக்கு அமெரிக்க வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்