SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பூட்டு: பொதுமக்கள் அவதி

2017-04-21@ 17:44:54

மன்னார்குடி: விவசாய தொழிலாளர்களை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலுவலர்களே பூட்டு போட்ட சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இரண்டு தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருவரையும் கைது செய்யும் வரை பணிக்கு திரும்ப போவதில்லை எனக்கூறிய அலுவலர்கள் இன்று அலுவலகத்தை பூட்டி விட்டு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று விட்டனர். இதனால் சான்றுகளை பெற வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் வட்டாட்சியரிடம் மனு அளிக்க முயன்ற போது விவசாய தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்