SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாஜ் மகாலை பார்க்க வந்த உலக அழகிகளுக்கு அனுமதி மறுப்பு: தலையில் காவி துணி கட்டியிருந்ததால் பாதுகாப்பு படை அதிரடி

2017-04-21@ 17:43:56

ஆக்ரா: காதல் சின்னமான தாஜ்மகாலை பார்க்க வந்த வெளிநாட்டு மாடல் அழகிகளிடம் காவித் தலை துணியை அகற்றுமாறு பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இதை கண்டித்து வலதுசாரி இந்துதுவா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் நடக்கும் சர்வதேச சூப்பர் மாடல் அழகி போட்டியில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடல்கள் வந்துள்ளனர். இவர்கள் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மகாலை பார்வையிட வந்தனர். அப்போது ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட காவித்துணியை தலையில் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய பாதுகாப்பு படையினர் அவற்றை அகற்றாவிட்டால் தாஜ்மகாலுக்குள் அனுமதிக்க மாட்டடோம் என தடுத்துள்ளனர். இது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரின் செயலை கண்டித்து வலதுசாரி இந்துதுவா அமைப்புகள் ஆக்ராவில் உள்ள தொல்பொருள் ஆய்வு நிறுவன அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அழகிகள் தடுக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்பு படையிடம் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் காவித்துணியை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையான சி.ஏ.எஸ்.எஃப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-09-2017

    27-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்