SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை: ஐகோர்ட் அதிரடி

2017-04-21@ 16:50:46

சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே மாதம் 4ம் தேதி வரை இந்த தடை தொடரும் என ஐகோர்ட் கூறியுள்ளது. இடைக்கால தடை தளர்வை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்பின் 20-10-2016க்கு முன் பதிவுசெய்த நிலங்களை மறுபதிவு செய்ய கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் பத்திரவுபதிவு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே மாதம் 4ம் தேதி வரை இந்த தடை தொடரும் என ஐகோர்ட் கூறியுள்ளது. இடைக்கால தடை தளர்வை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசு வரைவு விதிகளை உருவாக்கி தாக்கல் செய்யப்படும் வரை தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் தளர்வை நீக்கக்கூடாது என்ற ரியல் எஸ்டேட் தரப்பினர் கோரிக்கை உயர்நீதிமன்றத்தால் நிராகரிப்பட்டுள்ளது. 20-10-2016க்கு முன் பதிவுசெய்த நிலங்களை மறுபதிவு செய்ய கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்தது தளர்த்திய விதியை பயன்படுத்தி முறைகேடு நடந்ததாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் வாதாடிய அரசு வக்கீல் நிலம் வரையறை செய்ய 2 வாரத்தில் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். மேலும் இந்த வழக்கு மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட்டுக்கு பின்னடைவு:

பத்திரப்பதிவுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்