SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிரே போனாலும் பன்னீர் தலைமையை ஏற்கப்போவதில்லை: நாஞ்சில் சம்பத் ஆவேசம்

2017-04-21@ 16:04:31

சென்னை: உயிரே போனாலும் பன்னீர்செல்வம் அணியில் இணைய மாட்டேன் என அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும் தனது முழு ஆதரவும் டிடிவி தினகரனுக்கு மட்டும் தான் எனவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவர்கள் மீண்டும் இணைந்து அவர்கள் தலைமையை ஏற்க நேரிட்டால் உயிரை மாய்த்து கொள்வேன் என அதிரடியாக பேசியிருக்கிறார். சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என மன்றாடிய அமைச்சர்கள் இப்படி திடீர் பலடி அடிப்பதற்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் அழுத்தமே காரணம் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

மேலும் தலைமை இல்லாத பாஜக உருவாக வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் கனவு என்றும் அவர் கூறியிருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவை கடுமையாக விமர்சித்தவர் நாஞ்சில் சம்பத். இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகுவார் என்று கருத்து அப்போது நிலவியது. பின்னர் சசிகலா அழைத்து பேசியதால் அவரை ஆதரித்து பேச தொடங்கினார். இப்போது அதிமுக மூன்றாக பிளவுபட்டுள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறிவிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27PEOPLEdeidINhigHWAYacc

    கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

  • PEGGYwhitsonASTRONAUT

    அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

  • RAM100yauliVECH

    ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

  • ooty_pugaiii

    ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

  • strike_governmenn

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்