SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜியோ டிடிஎச் 6 மாத இலவச சேவை: சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி

2017-04-21@ 16:03:48

டெல்லி: ஜியோ 4ஜி சேவைகள் ஆறு மாதங்களை கடந்தும் இலவசமாக வழங்கப்பட்டது. அனைவரும் ஜியோ சிம்கார்டை வாங்கி பயன்படுத்த தொடங்கினர். இந்நிலையில் ஜியோ டிடிஎச் சேவைகளும் முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஜியோ டிடிஎச் சேவைக்கு பதிவு செய்யக் கோரும் இணைய முகவரி வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள இணைய முகவரியில் ஜியோ பிரைம் டிடிஎச் சேவை மூலம் முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக பெறுங்கள் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.ஜியோ டிடிஎச் அறிமுக சலுகையின் கீழ் ஜியோ டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் சேவையை முதல் ஆறு மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். இத்துடன் 432 டிவி சேனல்களும், 350க்கும் அதிகமான சாதாரண சேனல்களும், 50க்கும் அதிகமான எச்டி சேனல்களும் பெற முடியும்.

மேலும் ஏற்கனவே 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஎச் சேவையில் பதிவு செய்யும் பகுதி இடம்பெற்றுள்ளது. இதில் பெயர், மொபைல் நம்பர் மற்றும் மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை வழங்கி பதிவு செய்வதற்கான பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் வேகமாக பரவி வருகிறது. இதனை யாரும் நம்பி யாரும் பதிவு செய்ய வேண்டாம் என ஜியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Sachin45thBirthday

    மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

  • SingaporeperumalTemple

    164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்