SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரனுக்கு கால அவகாசம் அளிக்க போலீஸ் மறுப்பு

2017-04-21@ 15:39:24

டெல்லி: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் உரிமை கோரினர். இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அத்துடன் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது? என்பது குறித்து முடிவெடுக்க இரு அணிகளையும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனிடம் அவருடைய இல்லத்தில் சந்தித்து சம்மனை வழங்கினர்.

டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்த டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் வரும் சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்றது. டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக டிடிவி தினகரன் 3 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு கூடுதல் அவகாசம் தர டெல்லி காவல் உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் மறுப்பு தெரிவித்தார். போலீஸ் முன் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நாளை டெல்லி போலீசார் முன் ஆஜராகி டிடிவி தினகரன் விளக்கம் அளிக்க உள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alternateSTUDD

    மாற்றுத் திறனாளி மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து போட்டிகளில் கலந்துகொண்டனர்

  • kaipiyath_injuredd

    உ.பி.யில் கைஃபியாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 74 பேர் காயம்

  • SRINIVsas20vedu

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள்

  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்