SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சச்சின் பற்றி தயாராகும் ஆவணப்படத்திற்கு வீடியோ பதிவுகளை அளிக்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு

2017-04-21@ 15:34:30

மும்பை: கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஆவண படத்திற்கு அவரது சாதனைகளை காட்டும் வீடியோ காட்சிகளை இலவசமாக அளிக்கமுடியாது என கிரி்க்கெட் வாரியம் மறுத்துள்ளது. கிரிக்கெட் இதிகாசம் என போற்றப்படும் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை 'சச்சின் ஒரு பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது. இதற்கு தேவையான கிரிக்கெட் பதிவுகளை அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

ஆனால் கிரிக்கெட் பதிவுகளுக்கு தங்களிடம் காப்புரிமை உள்ளதால் இலவசமாக தரமுடியாது என மறுத்துள்ள கிரிக்கெட் வாரியம், வேண்டுமானால் அவற்றை விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே சமயம் மும்பை வான்கெடே மைதானத்தில் டெண்டுல்கர் நடத்திய விடைபெறும் பிரசங்கத்தை மட்டும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பது கிரிக்கெட் வாரியத்தின் நிலைபாடு. டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆவண படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மகேந்திர சிங் தோனியின் வர்த்தக கூட்டாளி அருன் பான்டே என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alternateSTUDD

    மாற்றுத் திறனாளி மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து போட்டிகளில் கலந்துகொண்டனர்

  • kaipiyath_injuredd

    உ.பி.யில் கைஃபியாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 74 பேர் காயம்

  • SRINIVsas20vedu

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள்

  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்