SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை அருகே சாலையில் நடமாடும் யானைகள்: வனவிலங்குகள் நடமாட்டத்தால் பயணிகள் அச்சம்

2017-04-21@ 15:04:27

கோவை: நீலகிரி மாவட்டத்தில் முள்ளிவனப்பகுதியில் இருந்த வெளியேறிய யானை கூட்டம் ஒன்று சாலையை வழிமறித்து நின்றதால் அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உரைந்தனர். கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால் உதகை செல்பவர்கள் மஞ்சூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வனத்தை ஒட்டியுள்ள இந்த குருகிய சாலையை யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். அதன்படி குட்டியுடன் கூடிய யானை கூட்டம் ஒன்று மஞ்சூரிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேனை வழிமறித்து நின்றது, இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் அருகே 60 அடி கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் போராடி மீட்டனர். சிக்கரம்பாளையம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் பீக்கிரிபாளையம் கிராமத்திற்கு தண்ணீர் தேடி வந்தன. அப்போது நாய்கள் துரத்தியதால் 20 காட்டுப்பன்றிகள் அருகிலிருந்த விவசாய கிணற்றில் விழுந்தன. காட்டுப்பன்றிகள் கிணற்றில் விழுந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வன அதிகாரிகள் பல மணி நேரம் போராடி காட்டுப்பன்றிகளை மேலே கொண்டு வந்தனர். வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் அவை உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulletRAILCHINAsdrder

    மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

  • WaterONMARSMMANS

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது

  • SPANfporestTREEDGT

    ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயினால் 150 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது

  • flood_kuttralam

    குற்றாலத்தில் தொடர் சாரலால் வெள்ளப்பெருக்கு : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

  • ramzan_cheer

    நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்