SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

2017-04-21@ 14:22:48

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதி ஏர்பேடு மண்டலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கடைகளுக்குள் புகுந்தது. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி - காளகஸ்தி செல்லும் வழியில் ஏர்பேடு என்னுமிடத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து வேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மேலும் 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் பலர் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடத்த இடத்தின் அருகே காவல்நிலையம் இருந்ததால் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். மேலும் படுகாயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulletRAILCHINAsdrder

    மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

  • WaterONMARSMMANS

    செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது

  • SPANfporestTREEDGT

    ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயினால் 150 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது

  • flood_kuttralam

    குற்றாலத்தில் தொடர் சாரலால் வெள்ளப்பெருக்கு : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

  • ramzan_cheer

    நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்