SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்லர், ராணா அதிரடியில் மும்பை அட்டகாச வெற்றி

2017-04-21@ 05:59:30

இந்தூர்: ஐபிஎல் டி20 தொடரில் பட்லர், ராணாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்தூரில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசியது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர் ஷேன் மார்ஷ் 26 ரன்னிலும், அடுத்து வந்த சாஹா 11 ரன்னிலும் வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு  கேப்டன் மேக்ஸ்வெல் களமிறங்கியதும் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒருமுனையில் மேக்ஸ்வெல்லும், மறுமுனையில் அம்லாவும் அதிரடியில் மிரட்ட, அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.

மெக்கிளெனகன் வீசிய 15வது ஓவரில் 28 ரன்னும், மலிங்கா வீசிய 16வது ஓவரில் 22 ரன்னும் என இரண்டே ஓவரில் 50 ரன் விளாசப்பட்டது. இந்த ஜோடி 33 பந்தில் 83 ரன் சேர்த்த நிலையில் மேக்ஸ்வெல் (40 ரன், 18 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) பும்ரா வேகத்தில் கிளீன்போல்டானார்.
தொடர்ந்து புயலென விளாசிய அம்லா அடுத்தடுத்த சிக்சருடன் 58 பந்தில், ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. அம்லா 104 ரன் (60 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), அக்சர் படேல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் அதிகபட்சமாக மலிங்கா 4 ஓவரில் 58 ரன்களை வாரி வழங்கினார்.

அடுத்ததாக, 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடியது. பார்த்திவ் படேல், ஜோஸ் பட்லர் ஜோடி 5.5 ஓவரில் 81 ரன் சேர்த்த நிலையில் பார்த்திவ் (37 ரன், 18 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்ததாக பட்லர், ராணா ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சராக்கியது. 47 பந்தில் மும்பை ஸ்கோர் 100ஐ எட்டியது. பட்லர் 24 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி 50 பந்தில் 85 ரன் விளாசிய நிலையில் பட்லர் 77 ரன்னில் (37 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ராணா 30 பந்தில் அரைசதம் பூர்த்தி செய்தார். ஹர்திக் பாண்டியா தன் பங்குக்கு விளாச, மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து வென்றது. ராணா 65 ரன் (34 பந்து, 7 சிக்சர்), பாண்டியா 15 ரன்களுடன் (4 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மா 4 ஓவரில் 58 ரன்களை அள்ளித்தந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Exhibitionbeetle

    ஒக்ஸ்வேகனின் 23வது பீட்டில் கார்கள் தினம் கண்காட்சி

  • flood_kanamazhai1

    கனமழையின் ருத்ரதாண்டவத்தால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது

  • 15cars_sand11

    மும்பையில் புதிய கட்டுமான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து : 15 கார்கள் சேதம்

  • russia_river11

    கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ரஷ்யாவின் நேவா ஆற்றங்கரையில் நடந்த திருவிழாவின் புகைப்படங்கள்

  • newyork_gay_pride_parade

    நியூயார்க் நகரில் LGBT சமுதாயத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணியின் காட்சி தொகுப்புகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்