SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொளத்தூர் தொகுதியில் ஆய்வு 6 நூலகங்களுக்கு புத்தகங்கள் , பொதுமக்களுக்கு குடங்கள் வழங்கிய ஸ்டாலின்

2017-04-21@ 01:21:25

சென்னை: கொளத்தூர் தொகுதியில் 6 நூலகங்களுக்கு 1110 புத்தகங்கள் மற்றும் குடிநீர் குடங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஏராளமானோருக்கு குடிநீர் குடங்களை வழங்கினார். 1110 புத்தகங்களை, மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6 நூலகங்களுக்கு வழங்கினார். அப்போது பொதுமக்கள், ‘‘இந்த பகுதியில்  ஆடு, மாடு, கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கடுமையான  துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.  அங்கிருந்த அதிகாரிகளை அழைத்த மு.க.ஸ்டாலின் சரி செய்ய நடவடிக்கை  எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அகரம் ரங்கசாய் தெருவில் உள்ள  அரசு நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன்  கலந்துரையாடினார்.

அப்போது எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு,  ரங்கநாதன், தாயகம் கவி,  சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மற்றும் பகுதி  செயலாளர் முரளிதரன், தேவ  ஜவகர், கோவி சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:  கொளத்தூர் தொகுதியில் நான் ஆய்வுப் பணியை தொடர்ந்து மேற்கொள்வது அனைவரு க்கும் தெரிந்த உண்மை. இன்று 64ம் வார்டில் குடிநீர் பிரச்னை போக்க மகாத்மா நகரில் தண்ணீர் குடங்கள் வழங்கியிருக்கிறோம். அதைத்தொடர்ந்து, தாமரை குளத்தை சுற்றி நடை பாதையும், பாதுகாப்பும் வழங்க ஆய்வு செய்திருக்கிறோம். தொடர்ந்து பல்வேறு பள்ளி களை ஆய்வு செய்து, அத்தியாவசிய அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி தந்திருக்கிறேன்.

எனது பிறந்தநாளில் வழங்கப்பட்ட புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கி றேன். கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர், ஜவஹர் நகர், கொளத்தூர், சீனிவா சபுரம், பேப்பர் மில்ஸ் சாலை, கபிலர் தெருவில் உள்ள 6 நூல் நிலையங்களுக்கு 1110 புத்தக ங்கள் இன்று வழங்கப்பட்டன. அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த 4 மாதகாலமாக மக்களை சந்திக்க முடியாத சூழல் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். அமைச்சர்கள் மக்கள் பணி ஆற்றவில்லை என்று நீங்கள் ஆளுநரிடம் புகார் தெரிவித்திருந்தீர்கள். ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா?
இதைப் பற்றி நான் ஏற்கனவே ஆளுநரிடம் சொல்லியிருக்கிறேன், அறிக்கை வாயிலாக வும் தெரிவித்து இருக்கிறேன், பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறேன், அமைச்சர் வீரமணி தெரிவித்து இருக்கிறார். எல்லோரும் அதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நிரந்தர ஆளுநரை நியமிக்க மத்திய அரசு ஏன் தாமதப்படுத்துகிறது? அதுபற்றி பிரதமர் உங்களுக்கு நேரம் ஒதுக்கினால், அதை பிரதமரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்