SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வெளியேறியது பார்சிலோனா

2017-04-21@ 00:30:08

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 2ம் கட்ட கால் இறுதியில் ஜூவென்டாஸ் அணியை 0-0 என்ற கணக்கில் டிரா செய்ததின் மூலம் பார்சிலோனா அணி தொடரிலிருந்து வெளியேறியது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா, ஜூவென்டாஸ் அணிகளுக்கு இடையேயான 2ம் கட்ட கால் இறுதிப் போட்டி, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதல் கட்ட கால் இறுதியில் பார்சிலோனா 0-3 என்ற கோல் கணக்கில் ஜூவென்டாசிடம் தோல்வி அடைந்திருந்தது. எனவே, இப்போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றால் மட்டுமே பார்சிலோனா அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இருந்தது.

முன்னதாக, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், பார்சிலோனா அணி 0-4 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணிக்கு எதிராக முதல் கட்ட லீக்கில் தோற்றது. பின்னர் சொந்த மண்ணில் நடந்த 2ம் கட்ட போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று, சராசரி விகித கோல் 6-5 என்ற கணக்கில் கால் இறுதிக்குள் நுழைந்தது. இதே போல, ஜூவென்டாசையும் பார்சிலோனா வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போட்டியில் பார்சிலோனா வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்தனர். நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மர், சுவாரசும் கோல் அடிக்கத் தவறினர். ஜூவென்டாஸ் அணி இப்போட்டியை டிரா செய்தாலே அரை இறுதிக்கு நுழைந்து விடலாம் என்பதால் தடுப்பு ஆட்டம் ஆடியது. தடுப்பாட்டத்தில் கைதேர்ந்த அந்த அணி வீரர்கள், பார்சிலோனாவை எளிதாக சமாளித்தனர்.

இதனால், 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம், ஜூவென்டாஸ் சராசரி விகித கோல் 3-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்தது. சொந்த மண்ணில் சாதிக்க தவறிய பார்சிலோனா கிளப் வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். நட்சத்திர வீரர் நெய்மர் கண்ணீர் மல்க மைதானத்தை விட்டு வெளியேறினார். சாம்பியன்ஸ் லீக் அரை இறுதியில் ரியல் மாட்ரிட், அத்லெடிகோ, மொனாகோ, ஜூவென்டாஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்