SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆஸி., அணி அறிவிப்பு

2017-04-21@ 00:30:06

மெல்போர்ன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடக்க உள்ள இத்தொடருக்கான ஆஸ்திரேலிய வீரர்கள் தேர்வு நேற்று நடந்தது. இதில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பேட்டின்சன், பாட் கம்மின்ஸ், ஜான் ஹாஸ்டிங், ஹேசல்வுட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆல்ரவுண்டர் பால்க்னர் இடம் பெறவில்லை. ஏ பிரிவில் ஆஸி, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து, பி பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாக்., இலங்கை இடம் பெற்றுள்ளன. ஆஸி. அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கம்மின்ஸ், பிஞ்ச், ஹாஸ்டிங், ஹேசல்வுட், ஹெட், ஹென்ரிக்ஸ், கிறிஸ் லைன், மேக்ஸ்வெல், பேட்டின்சன், ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், வாடே, ஜாம்பா.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2017

    23-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaiDISTRICTschool

    சென்னை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சோதனை

  • LIONGrabsmouthITWATER

    வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை திடீரென கடலுக்கு கவ்வி இழுத்த கடல்சிங்கம்

  • sworDMANdenoladTRUMP

    சவூதியில் வாள் நடனம் ஆடிய டொனால்ட் டிரம்ப்

  • wwriytten_jobbs

    தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது