SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணத்துக்கு முன் கர்ப்பமானார் செரீனா

2017-04-21@ 00:30:02

நியூயார்க்: உலகின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கர்ப்பமாக இருப்பது உறுதியாகி உள்ளது. இனி அடுத்த ஆண்டே அவர் போட்டியில் பங்கேற்பார். டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாக திகழும் செரீனா வில்லியம்ஸ், கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம், அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஸ்டெபி கிராப் சாதனையை தகர்த்து, 23 பட்டங்களுடன் 2வது இடத்தை பிடித்தார். ஜனவரிக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இந்நிலையில், கண்ணாடியின் முன் நின்று தானே எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள செரீனா, அதில் 20 வாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து, செரீனா கர்ப்பமடைந்திருப்பதை அவரின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

35 வயதான செரீனா வில்லியம்ஸ், ரெட்டிட் நிறுவனத்தின் துணை இயக்குனர் அலெஸ்சிஸ் ஒஹானியன் நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. குழந்தை பெறுவதற்காக, இனி செரீனா 2018 ஏப்ரல் மாதம் வரை விளையாட வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்