SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல நிறுவனத்தில் மூலப்பொருட்களை திருடி போலி ‘விக்’ விற்பனை செய்த ஊழியர் கைது

2017-04-21@ 00:29:31

சென்னை: பிரபல நிறுவனத்தில் 30 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருட்களை திருடி, போலி விக் தயாரித்து விற்பனை செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பிரபல ‘விக்’ முடி தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் தான் சினிமா சூட்டிங் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கும் விக் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தொழிலதிபர்களுக்கும் ஆர்டரின் பேரில் விக் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த அருண் (35) என்பவர் சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நிறுவனத்திற்கு வரும் ஆர்டர் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இதற்கிடையே அருண் நெற்குன்றத்தில் தனியாக விக் கடையை திறந்து, ரவிசந்திரன் நிறுவனத்தில் 30 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருட்களை திருடி, போலி விக் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது ஊழியர் அருண் விக் ஆர்டர் கொடுக்க வரும் நபர்களிடம் பேசி, நிறுவனத்தின் பெயரிலேயே தரம் குறைந்த விக்கை அவரது சொந்த கடையில் தயாரித்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்