SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுமுறை காலங்களில் இன்ப சுற்றுலா செல்ல ஏர் இந்தியா பல சலுகைகள் அறிவிப்பு

2017-04-20@ 17:28:11

சுற்றுலாப்பயணிகளை ள் குடும்பத்துடன் செல்ல பல சிறப்பு திட்டங்களை ஏர் ஆசியா அறிவித்துள்ளது. தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல குறைந்த விலையில் விமான டிக்கெட் கட்டணத்தை ஏர் ஆசியா அறிவித்துள்ளது.  ரூ.4499 விலையில் தாய்லாந்து சென்று சுற்றிப்பார்க்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் சலுகை விலையில் தாய்லாந்து சென்று வர ஏப்ரல் 23ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் இந்த சிறப்பு கட்டணத்தில் தாய்லாந்து சென்று வர ஏர் ஆசியா அணைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.


உணவு வகைகள்:

இங்கு வித விதமான உணவுகள் கிடைக்கின்றன. இங்கு  பெனாங்  அசாம்  லஷ்க கா , சார்  சுய் , சாம்பல்  ஸ்டிங்க்ரே போன்ற உணவுகள் மிகவும் பிரபலம். அனைவரும் தங்கள் விரும்பிய உணவை இங்கு ருசித்து மகிழ்கின்றனர்.  

ஷாப்பிங்:

தாய்லாந்தில் ஷாப்பிங் செய்ய பல இடங்கள் உள்ளன. பாங்காக், புக்கெட் ஆகிய இடங்களில் கிடைக்கும் துணிகள் மற்றும் வீடு உபயோக பொருட்கள் மிகவும் பிரபலம். இங்கு கிடைக்கும் பொருட்கள் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


கடற்கரைகள் மற்றும் தீவுகள்

இங்கு பல கடற்கரைகள் உள்ளன. இங்கு சூரியன் மறைவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்துள்ளன. கோஹ்  சமுய், கோஹ்  சாங் மற்றும்  கோஹ் பி போன்ற தீவுகள் இங்கு மிகவும் பிரபலம். இங்கு நீர் சறுக்கு விளையாட்டுகள் மற்றும் படகு சவரிகளின் மூலம் நீல நிற கடற்கரையை ரசிப்பதற்கு மிகவும் ஏற்ற இடம்.

ஏர் ஆசியாவின் இந்த சிறப்பு சலுகை மூலம்  தாய்லாந்தின் பல  இடங்களை சுற்றுப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த சலுகை 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி வரை ரூ. 4499  விலையில் கிடைக்கும். எனவே நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று ஏர் ஆசியாவுடன் தாய்லாந்தில் மகிழுங்கள்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alternateSTUDD

    மாற்றுத் திறனாளி மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து போட்டிகளில் கலந்துகொண்டனர்

  • kaipiyath_injuredd

    உ.பி.யில் கைஃபியாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 74 பேர் காயம்

  • SRINIVsas20vedu

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள்

  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்