SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் தரவரிசை முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி: 2வது இடத்தில் லயோலா கல்லூரி

2017-04-04@ 01:54:01

புதுடெல்லி: நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில், பொறியியல் கல்லூரிகளுக்கான பிரிவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. கல்லூரிகள் தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 2வது இடத்தை பிடித்துள்ளது.நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில், வெவ்வேறு பிரிவில் சிறந்த 100 கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்தாண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.கற்பிக்கும் முறை, உள்வாங்குதல், வசதிகள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, பட்டம் அளிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, பல்கலைக்கழகம், பொறியியல், மேலாண்மை, பார்மசி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கல்லூரிகள் தரம் பிரிக்கப்பட்டன. இம்முறை ஒட்டுமொத்தம், பொறியியல், மேலாண்மை, பல்கலைக்கழகம், கல்லூரிகள், பார்மசி ஆகிய பிரிவுகளின் கீழ் கல்லூரிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.இதில், பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐஐடி, 2வது ஆண்டாக நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 8வது இடத்தையும் வேலூர் விஐடி 13வது இடத்தையும் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ்சி (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) முதலிடத்தை பிடித்துள்ளது. இதிலும், மும்பை, கான்பூர், கரக்பூர் ஐஐடிக்களை பின்னுக்கு தள்ளி சென்னை ஐஐடி 2ம் இடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 13வது இடத்திலும், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 16வது இடத்திலும், வேலூர் விஐடி 22வது இடத்திலும் உள்ளது.

 பல்கலைக்கழகங்கள் தரவரிசையிலும் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலை. 6வது இடத்திலும், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 9வது இடத்திலும், வேலூர் விஐடி 14வது இடத்திலும்,  உள்ளன.புதிதாக தரம் பிரிக்கப்பட்டுள்ள கல்லூரிகள் பட்டியலில் டெல்லியின் மிரண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 2வது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி 10வது இடத்திலும், கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி 11வது இடத்திலும், காஞ்சிபுரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி 12வது இடத்திலும், விருதுநகர் அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 13வது இடத்திலும், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 14வது இடத்திலும், சென்னை எத்திராஜ் கல்லூரி 16வது இடத்திலும் உள்ளன.மேலாண்மை பிரிவில் அகமதாபாத் ஐஐஎம் முதலிடத்தை பெற்றுள்ளது. திருச்சி ஐஐஎம் 13வது இடத்தை பெற்றுள்ளது.  www.nirfindia.org/Ranking2017.html என்ற இணையதள முகவரியில் முழு தரவரிசை பட்டியலும் வெளியிடப்
பட்டுள்ளது.

டாப்-10 பட்டியல்
ஒட்டுமொத்த பிரிவில், முதலிடத்தை பெங்களூரு ஐஐஎஸ்சி, 2வது இடத்தை சென்னை ஐஐடி, 3வது இடத்தை மும்பை ஐஐடி, 4வது கரக்பூர் ஐஐடி, 5வது டெல்லி ஐஐடி, 6வது ஜவகர்லால் நேரு பல்கலை., (டெல்லி) 7வது கான்பூர் ஐஐடி, 8வது கவுகாத்தி ஐஐடி, 9வது ரூர்கே ஐஐடி, 10வது இடத்தை பனாராஸ் இந்து பல்கலை (வாரணாசி) பிடித்துள்ளன.
பொறியியல் தரவரிசை: 1. சென்னை ஐஐடி, 2. மும்பை ஐஐடி, 3. கரக்பூர் ஐஐடி, 4. டெல்லி ஐஐடி,. 5. கான்பூர் ஐஐடி, 6. ரூர்கே ஐஐடி, 7. கவுகாத்தி ஐஐடி, 8. அண்ணா பல்கலை. 9. ஜாதவ்பூர் பல்கலை (கொல்கத்தா), 10. ஐதராபாத் ஐஐடி.

கல்லூரிகள் தரவரிசை: 1. மிரண்டா ஹவுஸ் (டெல்லி), 2. லயோலா (சென்னை), 3. ராம் காலேஜ் ஆப் காமர்ஸ் (டெல்லி), 4. பிஷப் ஹெபர் கல்லூரி (திருச்சி), 5. ஆத்ம ராம் சனாதன் தர்மா கல்லூரி (டெல்லி), 6. செயின்ட் சேவியர் கல்லூரி (கொல்கத்தா), 7. லேடி  ராம் மகளிர் கல்லூரி (டெல்லி), 8. தயால் சிங் கல்லூரி (டெல்லி), 9. தீன தயாள் உபாத்யாயா கல்லூரி (டெல்லி), 10. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி (சென்னை).


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்