SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார்

2017-03-27@ 00:37:53

பெங்களூரு:  மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் கமல் மீது பெங்களூரு மடாதிபதி  போலீசில் புகார் அளித்துள்ளார். பெங்களூரு,  மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை  சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்–்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக  நேற்று பெங்களூரு  காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்.அதில், ‘‘நடிகர்  கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா  கூறியிருந்தார்.

கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக  எந்த ஆதரமும் இல்லை  என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால்,  அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள்  என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை.  மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே  வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி  அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்