SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐதராபாத் ஐபிஎல் அணி உரிமம் ஏலத்தில் வாங்கியது சன் குழுமம

2012-10-26@ 02:32:58

மும்பை : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள ஐதராபாத் அணிக்கான உரிமத்தை  சன் டிவி நெட்வொர்க்  ஏலம் முறையில் வென்றுள்ளது. இதற்கு முன் டெக்கான் க்ரானிக்கிள் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் இந்த உரிமத்தை பெற்றிருந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது. இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆனால் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன்களால் பாதிக்கப்பட்ட டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி உத்தரவாதத் தொகை மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியதால், அதற்கு வழங்கப்பட்ட ஐதராபாத் அணி உரிமம் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து, ஐதராபாத் அணிக்கான உரிமம் நேற்று ஏலம் விடப்பட்டது. ரூ.85 கோடிக்கு சன் குழுமம் ஏலம் கேட்டது. ஏலத்தில் பங்கேற்ற இதர நிறுவனங்கள் கேட்டதைவிட அது அதிகமாக இருந்ததால், சன் குழுமம் ஐதராபாத் அணிக்கான உரிமத்தை வென்றதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஐதராபாத் அணியின் புதிய பெயரை சன் குழுமம் விரைவில் அறிவிக்கும்.

sms spy app phone monitoring software spy apps free
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion pill procedures late term abortion pill having an abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்