SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம

2012-10-26@ 02:21:18

நியூயார்க் : இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை 5 வது முறையாக, தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை உலக அளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை தயாரித்து வெளியி ட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு ரூ.1,13,400 கோடியாக உள்ளது. ஆனால், முந்தைய ஆண்டைக்காட்டி லும் ரூ.8,640 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக எஃகு துறை தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 2வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.86,400 கோடி. இவரது சொத்து மதிப்பும் ரூ.16,200 கோடி குறைந்துள்ளது.

3வது இடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வரும் அஜிம் பிரேம்ஜி இடம்பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.65,880 கோடி. 4வது இடத்தில் டாடா குழுமத்தின் பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் பலோன்ஜி மிஸ்ட்ரியும் (ரூ.52,940 கோடி), 5வது இடத்தில் சன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் திலிப் ஷாங்வியும் (ரூ.49,680 கோடி) உள்ளனர்.

இவர்களை தவிர 6வது இடத்தில் ஆதி கோத்ரெஜ் (ரூ.48,600 கோடி), 7வது இடத்தில்சாவித் ஜிண்டால் (ரூ.44,280 கோடி), 8வது இடத்தில் ஷாசி அண்ட் ரவி ரூலா (ரூ.43,740 கோடி), 9வது இடத்தில் இந்துஜா சகோதரர்கள் (ரூ.43,200 கோடி), 10 இடத்தில் குமாரமங்கலம் பிர்லா (ரூ.42,120 கோடி) உள்ளனர். முகேஷ் அம்பானியின் சகோதரரும் மற்றொரு கோடீஸ்வரருமான அனில் அம்பானி, இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.32,400 கோடி.

drug coupon card prescription coupons drug discount coupons
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்