SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேகர் ரெட்டி மீண்டும் கைது

2017-03-21@ 06:32:16

சென்னை: பிரபல மணல் குவாரி கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி உட்பட மூன்று பேர் அமலாக்கத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.கோடிக்கணக்கான மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினார் எனும் குற்றச்சாட்டில், பிரபல மணல் குவாரி காண்டிராக்டர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவர் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 34 கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகள், 180 கிலோவுக்கும் அதிகமான தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த சிபிஐ, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.

கைதான மூவரும் ஜாமீன் கோரியதை ஏற்ற நீதிமன்றம், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. அதையடுத்து சேகர் ரெட்டி உட்பட 3 பேரும்  அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்தனர். இதனிடையே, அவர்கள் மீதான மற்றொரு பண மோசடி வழக்கில், மேற்படி மூவரையும் அமலாக்கப் பிரிவினர் நேற்று கைது அதிரடியாக கைது செய்தனர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.


ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்