SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொலைக்காட்சி இணைப்புக்கு அதிக கட்டணம் கேபிள் மாபியாக்களை கட்டுக்குள் கொண்டுவர விரைவில் சட்டம்: பேரவையில் அமைச்சர் பரமேஸ்வர் உறுதி

2017-03-21@ 02:26:12

பெங்களூரு : கர்நாடகா மேல்சபையில் நேற்று அரசியல் சட்டம் 72 விதியின் கீழ் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது, மஜத எம்.எல்.சி., புட்டண்ணாவின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பதில் அளிக்கையில்,  கர்நாடகாவில், தொலைக்காட்சிகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்க அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. குறிப்பிட்ட தொகை என நிர்ணயம் இல்லாமல் கேபிள் இணைப்பு கொடுக்க கட்டுக்கடங்காமல் கட்டணம் வசூலிக்கும் மாபியாக்களை தடுக்க விரைவில் உரிய சட்டம் கொண்டுவரப்படும். கேபிள் இணைப்பு கொடுக்க மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்துள்ளது. ஆனால் கேபிள் மாப்பியாக்கள் இந்த தொகையை வசூலிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க புதிய சட்டம் அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொலைக்காட்சிகளுக்கு கேபிள் நெட்வொர்க் மூலம் இணைப்புகளை கொடுப்பதில் தனியார் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அதேபோல் அவரவர் விருப்பம் போல் கட்டணங்களை நிர்ணயித்து வசூலிக்கின்றனர். இப்படி செய்வதால் இணைப்பு பெறும் பொதுமக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகின்றனர். அத்துடன் கட்டுப்பாடு இல்லாமல் பல ஆயிரம் கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியமாகும். 1995 கேபிள் நெட்வொர்க் சட்டம் மற்றும் 1994 கேபிள் நெட்வொர்க் சட்டப்படி டி.வி.களுக்கு இணைப்புகள் கொடுக்க கட்டணம் நிர்ணயிப்பதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

அதன்படி ஒரு டி.வி.க்கு இணைப்பு கொடுக்க மாதத்திற்கு கட்டணமாக ரூ. 130 மட்டும் வசூலிக்கவேண்டும். ஆனால், கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் பெரிய அளவில் கொள்ளையே நடந்துவருகிறது. கேபிள் இணைப்பு கொடுக்கும் விவகாரத்தில் ஆண்டுதோறும் ரூ. 4 ஆயிரம் கோடி முதல் ரூ. 5 ஆயிரம் கோடி வரை வியாபாரம் நடக்கிறது. கர்நாடக அரசு  மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கேபிள் மாப்பியாக்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவர அரசு தீவிரம் காட்டி அதற்கான வழிமுறைகளை வகுத்துவருகிறது. அத்துடன் விரைவில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தியே தீரும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2017

    29-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2017

    28-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • konnorFRUITSHOW2017

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியுள்ள பழக்கண்காட்சி : சிறப்புப் படங்கள்

  • SQUIRELsmothiTONGUE

    வெயிலின் கடுமையால் சோர்வடைந்து குடிநீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரில் நாக்கை நனைக்கும் அணில்

  • springFESTvlorDMURUG

    வசந்த விழாவின் நிறைவு நாளில் சிங்காரவேலர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்