SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி பத்திரப்பதிவு செய்த விவகாரம் மோசடியில் ஈடுபட்ட பிரபல டாக்டர் சிக்குகிறார்: வழக்கு பதிவு செய்ய கமிஷனரிடம் புகார்

2017-03-21@ 01:10:50

சென்னை: சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சுபிதா (40) இவர், கடந்தாண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘எனது தந்தை பிச்சைமணி சென்னை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எனது தாய் மாரியம்மாள். ஆதிலட்சுமி, விஜயலட்சுமி என்ற 2 சகோதரிகளும் சக்திகுமார் என்ற சகோதரனும் உள்ளனர். எனது அப்பா மருத்துவமனையில் இறந்தபோது அவரது கைரேகையை பதிவு செய்து அதன் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள தந்தையின் சொத்துக்களை எனது தாயும், சகோதரனும் அபகரித்துக்கொண்டனர். இதற்கு நீலாங்கரை சார் பதிவாளர் தாமு மற்றும் ஆறுமுகம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். சட்ட விரோதமாக எனது தந்தையின் சொத்துக்களை அபகரித்த தாய் மாரியம்மாள், சகோதரர் சக்திகுமார், ஆறுமுகம், சார் பதிவாளர் தாமு ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ெதரிவித்திருந்தார்.

இந்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, சுபிதா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் சக்திகுமார், மாரியம்மாள், ஆறுமுகம் மற்றும் சார்பதிவாளர் தாமு ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 23ம் தேதி சக்திகுமார், ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், சார்பதிவாளர் தாமுவை கைது செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், சார்பதிவாளர் தாமுவை 28 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 6ம் தேதி சார்பதிவாளர் தாமுவையும் கைது செய்தனர்.

மேலும், போலி பத்திரம் பதிவு செய்ய உறுதுணையாக இருந்த கோவையை சேர்ந்த பிரபல டாக்டர் மற்றும் அவரது மகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுபிதா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது தந்தை பிச்சைமணி சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாக கூறி கோவையில் மருத்துவமனை நடத்தி வரும் பிரபல டாக்டர் சான்றிதழ் அளித்துள்ளார். அதனடிப்படையில்தான் இந்த போலி பத்திரப் பதிவு நடந்துள்ளது. எனவே, அவரையும், அவரது மகளையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2018

  24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Two_wheeler_launch

  ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானிய விலை இரு சக்கர வாகனங்கள்

 • amman_murugan123

  மாசிமாத பிரம்மோற்சவ விழா: முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் நடைபெற்ற வீதி உலா காட்சிகள்!

 • hyper_dubai123

  12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்

 • jakto_jiyo11

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X