SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிழக்கு தாம்பரம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

2017-03-21@ 01:07:01

தாம்பரம்: அதிமுக பிரமுகர் வீட்டை உடைத்து 16 சவரன் நகை, 95 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கிழக்கு தாம்பரம் சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (63), அதிமுக பிரமுகர். அதே பகுதியில் போர்வெல் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் சங்கர், குடும்பத்தினருடன் சொந்த ஊரான நாகப்பட்டினம் சென்றார். நேற்று முன்தினம் மாலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், பீரோ மற்றும் லாக்கரை உடைத்து, அதில் வைத்திருந்த 16 சவரன் நகைகள் மற்றும் 95 ஆயிரம் ரொக்கம் மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்படி, சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்