SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்தா புயலில் சாய்ந்து 3 மாதமாகியும் அகற்றப்படாத மரம்

2017-03-21@ 01:07:00

* விபத்தில் சிக்கும் வாகனங்கள் * போக்குவரத்து நெரிசலால் அவதி

பல்லாவரம்: வர்தா புயலின்ேபாது, சாலையில் சாய்ந்த மரம் 3 மாதத்திற்கு மேலாக அகற்றப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.குன்றத்தூர் -பல்லாவரம் சாலையில் குன்றத்தூர் மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான மரம், கடந்த வர்தா புயலின் போது  சாய்ந்தது. அதன் கிளைகள் முறிந்து சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக இருந்தது. பேரூராட்சி நிர்வாகம் போக்குவரத்தை சரி செய்யும் நோக்கில் அதன் கிளையை மட்டும் லேசாக வெட்டியதோடு பணி முடிந்து விட்டதாக நின்று விட்டது. இன்று வரை மரத்தின் ஒரு பகுதி அகற்றப்படாமல் சாலை வரை நீட்டிக்கொண்டு, போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்கூட அடிக்கடி கிளையின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

குன்றத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு மக்களும் இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில்தான் புதிய மின் இணைப்புகள் பெறவும் மற்றும் மாதாந்திர மின் கட்டணம் செலுத்தவும் வந்து செல்கின்றனர். ஆனால், மின் வாரியமோ, பேரூராட்சி அலுவலகமோ இந்த மரக்கிளையை முறையாக அகற்றாமல் மெத்தனம் காட்டி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே குன்றத்தூர்- பல்லாவரம் சாலை மிகக் குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் இந்த மரக்கிளை வேறு கடந்த 3 மாதத்திற்கு மேலாக அகற்றப்படாமல் உள்ளதால் மேலும் மேலும் விபத்திற்கு வழிவகை செய்வதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குன்றத்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனே தலையிட்டு, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளையை அகற்றி விபத்தில்லா பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • children_protestt11

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

  • 2500_type_idlyy

    உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

  • 30-03-2017

    30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • FLIHJTarestre

    செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

  • farmersSUPPORtstuMAR

    விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்