SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் அதிமுக வழங்கி வருகிறது: அன்புமணி குற்றச்சாட்டு

2017-03-21@ 01:06:59

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சென்னை மாவட்ட அலுவலகத்தில் அளித்த பேட்டி:தமிழகத்தில் நடைபெறுவது இடைத்தேர்தல் அல்ல. எடைதேர்தல். ஜெயலலிதா இடைத்தேர்தல் நேரத்தில் ஆர்.கே. நகர் பார்முலாவை செயல்படுத்தினார். தற்போது, ஆர்.கே.நகரில் அதிமுக ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது.

ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் ரூ.50000 வந்துவிடும். தேர்தல் நியாயமாக நடைபெற போவது இல்லை.
இந்த தேர்தல் எப்படி நடைபெறும் என்பது முன்கூட்டியே தெரிந்தது தான். சட்டமன்ற பொது தேர்தலிலே 234 தொகுதியிலும் காசு வாரி இறைக்கப்பட்டது. அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற பொது தேர்தல்களிலும் கட்சியை சாராத பொதுவான இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.  என்றார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்