SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் வெஸ்னினா சாம்பியன்

2017-03-21@ 01:06:33

நியூயார்க்: இண்டியன் வெல்ஸ் பிஎன்பி பாரிபா டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீராங்கனை எலினா வெஸ்னினா சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் சக வீராங்கனை ஸ்வெட்லனா கஸ்னட்சோவாவுடன் நேற்று மோதிய வெஸ்னினா 6-7 (6-8) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய அவர் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி கஸ்னட்சோவாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த வெஸ்னினா 6-7 (6-8), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். ஒற்றையர் பிரிவில் இது அவர் பெற்ற 3வது டபுள்யுடிஏ பட்டமாகும்.

5வது முறையாக அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சுவிஸ் வீரர்கள் ரோஜர் பெடரர் - ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா மோதினர். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பெடரர் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 5வது முறையாக இண்டியன் வெல்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலமாக ஜோகோவிச்சின் சாதனையை சமன் செய்தார்.காயம் காரணமாக 6 மாதம் ஓய்வில் இருந்ததால் தரவரிசையில் 17வது இடத்துக்கு தள்ளப்பட்ட பெடரர், ஆஸி. ஓபனில் தனது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதுடன் தற்போது இண்டியன் வெல்ஸ் தொடரிலும் கோப்பையை கைப்பற்றியதால் 6வது இடத்துக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • children_protestt11

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

  • 2500_type_idlyy

    உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

  • 30-03-2017

    30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • FLIHJTarestre

    செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

  • farmersSUPPORtstuMAR

    விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்