SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துளித் துளியாய்...

2017-03-21@ 01:06:32

* ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வேலன்சியா அணியை வீழ்த்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2 கோல் அடித்தார்.
* ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசனில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஆல் ரவுண்டர் ஜீன் பால் டுமினி (தென் ஆப்ரிக்கா) அறிவித்துள்ளார். டேர்டெவில்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஏப்.8ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.
* ராஞ்சி டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்துகள் தரமானவையாக இல்லை என்று இந்திய அணி கேப்டன் கோஹ்லி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
* காயத்தால் அவதிப்பட்டு வரும் செர்பிய வீரர் ஜோகோவிச் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
* மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். செரீனா 2வது இடத்தில் உள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்