SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினேஷ் கார்த்திக் அபார சதம் விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றியது தமிழகம்

2017-03-21@ 01:06:31

புதுடெல்லி: பெங்கால் அணியுடன் நடந்த இறுதிப் போட்டியில் 37 ரன் வித்தியாசத்தில் வென்ற தமிழக அணி, விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றியது.டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த பைனலில், டாசில் வென்று பேட் செய்த தமிழகம் 47.2 ஓவரில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 112 ரன் (120 பந்து, 14 பவுண்டரி) விளாசினார். இந்திரஜித் 32, வாஷிங்டன் சுந்தர் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பெங்கால் பந்துவீச்சில் முகமது ஷமி 4, அஷோக் டிண்டா 3, சேத் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி 45.5 ஓவரில் 189 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சுதிப் சாட்டர்ஜி அதிகபட்சமாக 58 ரன் எடுத்தார். கேப்டன் மனோஜ் திவாரி 32, கோஸ்வாமி 23, அனுஸ்துப், ஆமிர் கானி தலா 24 ரன் எடுக்க, மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். தமிழக பந்துவீச்சில் அஸ்வின் கிறிஸ்ட், முகமது, ரகில் ஷா தலா 2, விஜய் ஷங்கர், அபராஜித், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
37 ரன் வித்தியாசத்தில் வென்ற தமிழகம் 2016-17 சீசனுக்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி அசத்தியது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்