SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷான் மார்ஷ் - ஹேண்ட்ஸ்கோம்ப் பொறுப்பான ஆட்டம் தப்பி பிழைத்தது ஆஸ்திரேலியா

2017-03-21@ 01:06:30

ராஞ்சி: இந்திய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், ஷான் மார்ஷ் - ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில் இருந்து தப்பியது.ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன் குவித்தது, கேப்டன் ஸ்மித் 178 ரன், மேக்ஸ்வெல் 104 ரன் விளாசினர். ஜடேஜா 5 விக்கெட், உமேஷ் 3 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ராகுல் 67, விஜய் 82, புஜாரா 202, சாஹா 117, ஜடேஜா 54* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 152 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 4ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்திருந்தது.

ரென்ஷா (7), கேப்டன் ஸ்மித் இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரென்ஷா 15 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஸ்மித் 23 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் கிளீன் போல்டாக, ஆஸ்திரேலியா 63 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஷான் மார்ஷ் - பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி உறுதியுடன் போராடியது.நிதானமாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தவித்தனர். கேப்டன் கோஹ்லி மேற்கொண்ட வியூகங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. அரை சதம் அடித்த இருவரும் 5வது விக்கெட்டுக்கு 124 ரன் சேர்த்தனர். ஷான் மார்ஷ் 53 ரன் (197 பந்து, 7 பவுண்டரி), கிளென் மேக்ஸ்வெல் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, சற்று பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஹேண்ட்ஸ்கோம்ப் - மேத்யூ வேடு இணை பொறுப்புடன் விளையாடி போட்டியை டிரா செய்ய உதவியது.

ஆஸ்திரேலியா 100 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன் (200 பந்து, 7 பவுண்டரி), வேடு 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4, இஷாந்த், அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 2 இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றிய நிலையில், அஷ்வின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாதது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதித்தது.இரட்டை சதம் விளாசிய புஜாரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் 25ம் தேதி தொடங்குகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sushmafrancepm

  பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

 • coolingtowersflorida

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

 • taiwaneseminimodels

  தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

 • tentsforchildrenstexas

  அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

 • PresidentGreeceleaders

  அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்