SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்

2017-03-21@ 01:06:30

புதுடெல்லி: உயிர்காக்கும் மருந்துகள் ஏழைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க, அவற்றை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. இவற்றுக்கு விலை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 வகை போலி மருந்துகள் விற்கப்படுகின்றன எனவும் சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 15 வகையான மருந்துகளின் 224 மூலக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நாடு முழுவதும் 650 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகள், அரசு மருந்தகங்கள், விமான நிலையம் மற்றும் கப்பல்துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டன. இதை ஆய்வுக்கு உட்படுத்தியபோதுதான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ளவற்றில் இந்த தரமற்ற மருந்துகளின் சதவீதம் 3.16 சதவீதம் எனவும், போலி மருந்துகள் 0.024 சதவீதம் எனவும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மருந்துகளின் தரம் மற்றும் விற்பனையை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் இணையதளம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மருந்துகள் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் மட்டுமே பார்கோடு அச்சிடும் நடைமுறை தற்போது உள்ளது. உள்நாட்டில் விற்கப்படும் மருந்துகளில் பார்கோடு அச்சிடப்படுவதில்லை. இவற்றில் சுமார் 3 சதவீதம் தரமற்ற அல்லது தரம் குறைந்த மருந்துகளாக இருக்கின்றன.இதை கண்காணிக்கும் வகையில் புதிய அறிவிப்பை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இதற்கான இணையதளத்தில் மருந்துகளின் விற்பனை விவரம், அவற்றில் உள்ள பேட்ச் எண்கள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

சந்தைக்கு எவ்வளவு மருந்துகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் காலாவதி தேதி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இதுபோல், மருந்து மொத்த விற்பனை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்டுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற மருந்து விவரங்களையும, அவற்றை விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு சப்ளை செய்த விவரத்தையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இந்த விவரங்களை கணினி மூலம் ஆன்லைனிலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ அனுப்பலாம். இணைய வசதி இல்லாத மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்துக்கடைகள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தங்களிடம் உள்ள மருந்து இருப்பு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் போலியான, தரமற்ற மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • children_protestt11

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

  • 2500_type_idlyy

    உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

  • 30-03-2017

    30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • FLIHJTarestre

    செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

  • farmersSUPPORtstuMAR

    விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்