SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2017-03-21@ 01:06:21

புதுடெல்லி: ஜிஎஸ்டியின் 4 துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. விரைவில் 4 துணை மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வரும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்பாக, ஜிஎஸ்டியின் இழப்பீடு மசோதா, மத்திய ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச ஜிஎஸ்டி ஆகிய 4 துணை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலின் கடந்த 2 கூட்டங்களில், இந்த 4 துணை மசோதாக்களுக்கும், மாநில ஜிஎஸ்டி மசோதாவுக்கும் மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கின.

இதில், மாநில ஜிஎஸ்டி மசோதா அனைத்து மாநில சட்டப்பேரவையிலும், மற்ற 4 துணை மசோதாக்கள் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜிஎஸ்டியின் 4 துணை மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திலேயே இம்மசோதாக்கள், நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.நடப்பு கூட்டத்தொடரிலேயே 4 மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகை வரி கட்டமைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2017

    29-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2017

    28-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • konnorFRUITSHOW2017

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியுள்ள பழக்கண்காட்சி : சிறப்புப் படங்கள்

  • SQUIRELsmothiTONGUE

    வெயிலின் கடுமையால் சோர்வடைந்து குடிநீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரில் நாக்கை நனைக்கும் அணில்

  • springFESTvlorDMURUG

    வசந்த விழாவின் நிறைவு நாளில் சிங்காரவேலர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்