SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு கேட்டு டெல்லியில் திமுக பேரணி: கனிமொழி தலைமையில் நடந்தது

2017-03-21@ 01:06:18

புதுடெல்லி: மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி கனிமொழி எம்பி தலைமையில் திமுக மகளிர் அணியினர் சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கனிமொழி எம்பி தலைமையில் திமுக மகளிரணியினர் டெல்லியில் நேற்று பேரணி நடத்தினர்.

மாண்டி ஹவுஸ் முதல் ஜந்தர் மந்தர் வரையில் சுமார் 4 கிமீ தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் ஜந்தர் மந்தரில் கூடி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிரணியினர் தவிர, பிறமாநில எதிர்கட்சிகளை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, சுப்ரியா சுலே பவார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2017

    29-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2017

    28-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • konnorFRUITSHOW2017

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியுள்ள பழக்கண்காட்சி : சிறப்புப் படங்கள்

  • SQUIRELsmothiTONGUE

    வெயிலின் கடுமையால் சோர்வடைந்து குடிநீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரில் நாக்கை நனைக்கும் அணில்

  • springFESTvlorDMURUG

    வசந்த விழாவின் நிறைவு நாளில் சிங்காரவேலர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்