SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெல்மெட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

2017-03-21@ 01:06:11

புதுடெல்லி: ஹெல்மெட் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் வாமன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மோட்டார் வாகன சட்டத்தின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

‘‘நாடாளுமன்றத்தை காட்டிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சட்டத்தை உருவாக்குங்கள் என்று உத்தரவிட முடியாது. அரசியல் சாசன விதிமுறைகளுக்கு புறம்பாக நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றினால் அதுகுறித்து எங்களால் விசாரிக்க முடியும். ஹெல்ெமட் அணிவதால் அடிப்படை உரிமை மீறப்படுவதில்லை. உங்கள் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிய வலியுறுத்தப்படுகிறது. எனவே இந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் நாடாளுமன்றத்தில் மட்டுமே எழுப்ப முடியும்’’ என்று தெரிவித்தனர்.


பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

  • SYRGERYrecovryyyBRAINN

    அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

  • aadi_velli111

    ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்