SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து: இனவெறி பிடித்த முதியவர் கைது

2017-03-21@ 01:06:11

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் இந்திய பாதிரியாரை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் புறநகரான பான்கரில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த டோமி களத்தூர் மேத்யூ(48) என்பவர் பாதிரியராக உள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேவாலயத்தில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர். பாதிரியார் டோமி களத்தூர் மேத்யூ பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்த 72 வயது முதியவர் ஒருவர், ‘‘இவர் ஒரு இந்தியர், எனவே இவர் இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ தான் இருக்க வேண்டும். இவர் பிரார்த்தனை நடத்த தகுதியற்றவர்’’ என சத்தமிட்டார். மேலும் திடீரென பாதிரியார் மீது பாய்ந்து, அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனால் பாதிரியாருக்கு ரத்தம் பீறிட்டு கொட்டியது. பாதிரியார் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிரியாரை கத்தியால் குத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

  • SYRGERYrecovryyyBRAINN

    அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

  • aadi_velli111

    ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்